அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. உயர்கல்வி மற்றும் நெடுஞ்சலைகள் அமைச்சர் கபீர் ஹாசீம் உடன் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன் போது அமைச்சர் 10 சதவிகித கொடுப்பனவுகளை வழங்க சம்மதம் தெரிவித்தமையால் போராட்டம் நிறைவுக்கு வந்ததாக பல்கலை தொழிற்சங்க கூட்டுக் குழு தலைவர் எட்வர்ட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அமைச்சினால் வழங்கப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான சுற்றறிக்கையை நாளைய தினம் பெற்றுக்கொள்ளும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment