வடகொரியாவுடன் சமரசம் செய்துகொள்ள விரும்பும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக ஜப்பான் பிரதமர் 17-ம் தேதி அமெரிக்கா செல்கிறார். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்திவருவதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதன் காரணமாக அந்நாட்டின் மீது ஐக்கிய நாடுகள் சபை பொருளாதார தடை விதித்தது.
இதேபோல், அமெரிக்காவின் எச்சரிக்கைகளை காதில் வாங்கிக் கொள்ளாத வடகொரியா அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதற்கிடையே, தென்கொரியா முயற்சியால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஏப்ரல் மாதம் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியானது.
இதற்கிடையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முதல் முறையாக சீனாவுக்கு கடந்த மாதம் 27-ம் ரகசிய பயணம் மேற்கொண்டார். சீன அதிபர் சி ஜின்பிங்-ஐ சந்தித்து பிராந்திய அரசியல் மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தினார். அணு ஆயுதங்களை குறைத்துகொள்ள சீன அதிபரிடம் சி ஜின்பிங் உறுதி அளித்ததாக தெரிகிறது.
இந்த சந்திப்புக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்திருந்தது. வடகொரியா மற்றும் சீன அதிபர்கள் சந்திப்புக்கு ரஷியாவும் வரவேற்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா - வடகொரியா இடையே இணக்கமான சந்திப்பு நடப்பதற்கு இந்த ஆலோசனை உதவிகரமாக அமைந்திருக்கும் என நாங்கள் நம்புகிறோம் என ரஷியா குறிப்பிட்டது.
இந்நிலையில், வடகொரியாவுடன் சமரசம் ஏற்படுத்துவது தொடர்பாக உலக நாடுகளிடையே அழுத்தம் கொடுக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதில் ஒருகட்டமாக, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வரும் 17-ம் தேதி அமெரிக்கா செல்கிறார்.
17 மற்றும் 18-ம் தேதிவரை தென்கிழக்கு அமெரிக்காவிற்குட்பட்ட புளோரிடா நகரில் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான சொகுசு விடுதியில் தங்கி இருக்கும் ஷின்சோ அபே - டொனால்ட் டிரம்ப் இடையே நடைபெறும் இந்த பேச்சுவார்த்தை வடகொரியா - அமெரிக்கா இடையிலான சமரச முயற்சியில் பெரும் திருப்புமுனையாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment