ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருகின்றது. ஜனாதிபதியின் உத்தியோபூர்வ இல்லத்தில் இந்த கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
இதில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது பிரதமருக்கு இடையிலான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment