யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்கள் இன்றைய தினம் கொடும்பாவி எரிப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் உட்பட நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழக ஊழியர்கள் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகப் பிரிவினர் உள்ளிட்ட சிலர் தமது போராட்டத்திற்கு குழப்பம் விளைவிப்பதாகத் தெரிவித்து, அதனைக் கண்டிக்கும் முகமாக பல்கலைக்கழக வளாகத்துள் கொடும்பாவி கட்டி இழுக்கப்பட்டு ஒப்பாரி வைத்து, யாழ். பல்கலைக்கழக வாசலில் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதவிடத்து பல்வேறு வடிவங்களில் தமது போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment