முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உட்பட 5 பேரை நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியிருந்தது. சட்டவிரோதமாக துப்பாக்கியை வைத்திருந்த சம்பவத்தில் பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட ஐவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், தங்களுக்கு பிணை வழங்குமாறு கோரி சீர்த்திருத்த மனுவொன்றினை நீதிமன்றில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதுதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன் போது சந்தேக நபர்களை தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்க பிணையிலும் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் செல்லுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மேலும், பிரபல வர்த்தகர் ஒருவரை கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment