நாளை முதல் எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரை நாடளாவிய ரீதியில் தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பருவ கால மழை ஆரம்பித்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் டெங்கு நுளம்புகள் வேகமாக பரவக் கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இதனை கருத்திற் கொண்டே தேசிய நுளம்பு ஒழிப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் கல்வி, சுகாதார அமைச்சுகளும், டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியும் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment