கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைந்துள்ள ஓய்வறையில், குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நீண்ட காலமாக நடாத்தி செல்லப்பட்ட சட்டவிரோத மதுபான களஞ்சியசாலை சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
அதிக விலை கொண்ட மதுபான போத்தல்களை தமது ஓய்வறையில் மறைத்து வைத்து 8 ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமான விலையில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந்த மோசடி நடவடிக்கையால் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய பல கோடி ரூபா வருமானம் இல்லாமல் போயுள்ளது.
கலால்வரி போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது, குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் ஓய்வறையில் இருந்து அதிக விலை கொண்ட சுமார் 250 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment