ஒரே இடத்தில் 1,372 ரோபோட்டுகள் ஆனந்த நடனம்- புதிய கின்னஸ் சாதனை - News View

About Us

About Us

Breaking

Monday, April 2, 2018

ஒரே இடத்தில் 1,372 ரோபோட்டுகள் ஆனந்த நடனம்- புதிய கின்னஸ் சாதனை

இத்தாலியில் 1,372 ரோபோட்டுகள் ஒரே இடத்தில் நடனமாடி புதிய கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது. இத்தாலியில் ரோபோட்டுகள் நடமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 1,372 ஆல்பா 1 எஸ் ரக ரோபோட்டுகள் நடமாடின. இது புதிய உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது.
இதற்கு முன் சீனாவில் 1069 ரோபோட்டுகள் நடமாடியது சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இத்தாலி முறியடித்துள்ளது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 40 செமீ உயரம் உள்ள இந்த ரோபோட்டுகள் அலுமினியத்தால் செய்யப்பட்டு பிளாஸ்டிக்கால் மூடப்பட்டுள்ளது. இந்த உலகச்சாதனை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

No comments:

Post a Comment