கல்வியியல் கல்லூரிகளுக்கு மே மாதத்தில் மாணவர்கள் இணைத்து;க கொள்ள நடவடிக்கை - News View

About Us

Add+Banner

Breaking

  

Sunday, April 1, 2018

demo-image

கல்வியியல் கல்லூரிகளுக்கு மே மாதத்தில் மாணவர்கள் இணைத்து;க கொள்ள நடவடிக்கை

d138c9a71dd16a692619823f92ff809e_XL
கல்வியியல் கல்லூரிகளுக்கு மே மாதத்தில் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். நேர்முகப் பரீட்சைகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 4,745 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர் என்று ஆசிரியர் கல்வி தலைமை ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.

கல்வியியல் கல்லூரிகளில் மூன்றாம் வருடத்திற்கான கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு, தங்குமிட வசதிகளைக் கொண்ட, பயிற்சிகள் இன்று முதல் பாடசாலைகளுடன் ஒன்றிணைக்கப்படுமென்றும் ஆசிரியர் கல்வி தலைமை ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார குறிப்பிட்டுள்ளார்.

2015ம் ஆண்டு கல்விப் பொதுத்தராத உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். ஆரம்ப மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்காக இம்முறை கூடுதலான மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர் என்றும் வெர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *