கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் - News View

About Us

About Us

Breaking

Monday, April 2, 2018

கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில்

கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை முன்வைத்து, இன்று திங்கட்கிழமை முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் இன்று காலை ஒன்றுகூடிய கல்விசாரா ஊழியர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2013 ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மொழித்திறன் கொடுப்பனவு உடன்பாட்டின் பிரகாரம் மீண்டும் வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த 34 நாட்களாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதில் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும், உயர் கல்வி அமைச்சோ, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ எந்தவித நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளனர். பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சொத்துக்கடன் போதனை சாரா ஊழியர்களுக்கு அரைவாசியே வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளனர். உடன்பாட்டின் பிரகாரம் சகலருக்கும் சமமாக 2 மில்லியன் கடன் தொகையை வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சகல பல்கலைக்கழகங்களிலும் திறன்மிக்க காப்புறுதித் திட்டத்தை உருவாக்குவதற்கான செயற்திட்டங்கள் எதனையும் அமுல்படுத்தப்படாமையும், பொருத்தமான ஓய்வூதியத்திட்டத்தை உருவாக்குவதற்கான எந்த நடவடிக்கையும் உடன்பாட்டின் பிரகாரம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளுடன் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment