யாழின் பாரம்பரியம் : திறந்து வைத்த சந்திரிக்கா அம்மையார் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 1, 2018

யாழின் பாரம்பரியம் : திறந்து வைத்த சந்திரிக்கா அம்மையார்

வடக்கின் பாரம்பரிய உணவகமான “அம்மாச்சி” உணவகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் கீரிமலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை முன்னாள் ஜனாதிபதியும், நல்லிணக்க செயலகத்தின் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க திறந்து வைத்தார்.

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் வட. மாகாணத்தில் சகல பகுதிகளிலும் “அம்மாச்சி” உணவகம் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தை அண்மித்த பகுதியில் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகமே நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment