பாதாள உலக தலைவர்களின் மிக நெருங்கிய சகா கைது.! - News View

About Us

About Us

Breaking

Monday, April 2, 2018

பாதாள உலக தலைவர்களின் மிக நெருங்கிய சகா கைது.!

ஆமி சம்பத், புளூமெண்டல் சங்க ஆகிய பாதாள உலக தலைவர்களின் மிக நெருங்கிய சகாவாக விளங்கிய உக்குவா எனப்படும் புளூமெண்டல் பெத்தும் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் திட்டமிட்ட குற்றங்களை ஒடுக்கும் விஷேட படையணி இவரைக் கைது செய்துள்ளது.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைவாக புளூமெண்டல் பகுதியின் தொடர்மாடி குடியிருப்பொன்றினை சுற்றி வளைத்து அவரைக் கைது செய்ததாக அதிரடிப் படையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட உக்குவா, இரு கொலைகள் மற்றும் போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் எனவும், சட்ட விரோத ஆயுதம் ஒன்றினை உடன் வைத்திருந்தமை தொடர்பில் சிறையில் சிறிது காலம் இருந்தவர் என தெரிவிக்கும் பொலிஸார் அவரைக் கைது செய்யும் போது அவரிடம் ஒருந்து 5.600 கிராம் ஹெரோயின் போதைப் பொருளினையும் கைப்பற்றியதாக கூறினர்.

No comments:

Post a Comment