மசாஜ் நிலையத்தில் இடம்பெறும் விபசார நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் இருக்க மாதாந்த இலஞ்சம் வாங்கிய பொலிஸ் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 1, 2018

மசாஜ் நிலையத்தில் இடம்பெறும் விபசார நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் இருக்க மாதாந்த இலஞ்சம் வாங்கிய பொலிஸ்

வென்னப்புவ உதவி பொலிஸ் அத்தியட்சர் தேசப்பிரிய ஜயதிலக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் நேற்று இரவு முதல் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர்வின் உத்தர்வுக்கு அமைய அவர் இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

வென்னப்புவ பகுதியில் உள்ள மசாஜ் நிலையத்தில் இடம்பெறுவதாக கூறப்படும் விபசார நடவடிக்கைகள் தொடர்பில் எந்த சுற்றி வளைப்புக்களையும் மேற்கொள்ளாது, தனது கடமையை செய்யாது இருப்பதற்காக மாதார்ந்தம் 30 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற இணக்காப்பாட்டுக்கு வந்து முதல் மாதத்தின் தொகையை இலஞ்சமாக பெறும் போதே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரியந்த சந்தர்சிரிக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடொன்றுக்கு அமைவாக அவரது ஆலோசனைப் படி முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போதே, உதவி பொலிஸ் அத்தியட்சர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த உதவி பொலிஸ் அத்தியட்சர், தற்போது விளக்கமரியலில் வைக்கப்ப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment