பிரதமர் இன்று பிற்பகல் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டு சென்றார். - News View

About Us

About Us

Breaking

Thursday, March 1, 2018

பிரதமர் இன்று பிற்பகல் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டு சென்றார்.

கொழும்பு பங்கு சந்தையின் ஏற்பாட்டில் நடக்கும் இன்வஸ்ட் ஸ்ரீலங்கா என்ற மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்குடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டு சென்றார்.

இந்த மாநாட்டில் உலகின் முதலீட்டாளர்கள் பலர் கலந்துகொள்வதுடன், பிரதமரும் கலந்து கொள்ளவுள்ளார். இந்த மாநாடு இதற்கு முன்னர் ஐக்கிய இராஜ்ஜியம், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், அவுஸ்திரேலியா, நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலும் நடைபெற்றுள்ளன. 

2018 ஆம் ஆண்டு இலங்கை - சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திட்டதன் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவு பன்மடங்கு பலமாகுவதற்கு குறித்த மாநாடு ஒத்துழைப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

இந்த மாநாட்டிற்கு சிங்கப்பூர் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் எஸ். ஈஸ்வரன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி உட்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment