தமது சிறுநீரகம் தொடர்பில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று தேசிய சிறுநீரக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரத்தினசிறி ஹேவகே தெரிவித்தார். வருடத்தில் ஒரு முறையேனும் சிறுநீரக பரிசோதனை செய்து கொள்ளல் அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
வைத்தியப்பிரிவு வழங்கும் ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிப்பதன் மூலம் சிறுநீரக நோயை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் தொற்றா நோயான சிறுநீரக நோய்க்கான காரணத்தை 2020ஆம் ஆண்டளவில் அடையாளம் கண்டு இந்நோயை நாட்டில் இருந்து முற்றாக இல்லாதொழிப்பதற்காக தேவையான முறையான சிகிச்சையை ஆரம்பிப்பதே ஜனாதிபதியின் இலக்காகும் என்று சிறுநீரக நோய் ஒழிப்பு ஜனாதிபதியின் செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தகவலை குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில், 12 மாவட்டங்களில் சிறுநீரக நோயை கட்டுப்படுத்துவதற்கான பல திட்டங்கள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இந்த மாவட்டங்களில் உள்ள சுமார் 12 இலட்சம் மக்களில் சுமார் ஆறு இலட்சம் பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதற்காக சுகாதார பணியாளர்கள் வழங்கி வரும் பங்களிப்பு மகத்தானதென பணிப்பாளர் இத்தவெல தெரிவித்தார்.
இம்முறை சர்வதேச சிறுநீரக நோய் கட்டுப்பாட்டு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் தலைமையில் மொனறாகலை புத்தல பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டு சிகிச்சை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.
வைத்தியப் பிரிவு வழங்கும் ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிப்பதன் மூலம் சிறுநீரக நோயை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment