உயிரிழந்த நிலையில் சிறுத்தைக் குட்டி ஒன்று மீட்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, March 4, 2018

உயிரிழந்த நிலையில் சிறுத்தைக் குட்டி ஒன்று மீட்பு

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தின் வளாகப்பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தைக் குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலை வளாகப்பகுதிகளில் இன்று காலை பெற்றோர்கள் மற்றும் மாணவர்களால் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்ட பொழுது, சிறுத்தைக்குட்டி ஒன்று இருப்பதைக் கண்ட பெற்றோர்கள் தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல்களை வழங்கியுள்ளனர்.

இதன் பின்னர், குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் சிறுத்தையின் சடலத்தை மீட்டுள்ளனர். இதேவேளை, சிறுத்தையின் சடலத்தை நுவரெலியா வனவிலங்கு காரியாலய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment