பிரதமருக்கு எதிரான பேரணி இன்றும் தொடர்கிறது - News View

About Us

About Us

Breaking

Saturday, March 31, 2018

பிரதமருக்கு எதிரான பேரணி இன்றும் தொடர்கிறது

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து ஆரம்பித்த பேரணி இன்று நெலும்தெனியவை வந்தடையவுள்ளது. நேற்றைய தினம் கண்டியில் இருந்து ஆரம்பித்த பேரணி இன்று இரண்டாவது நாள் நிறைவில் நெலும்தெனியவை வந்தடையவுள்ளது.

சர்வாதிகார நண்பர்களை தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் எனக் கோரி இந்தப் பேரணி ஆரம்பிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி என்பன இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.

இதேவேளை, இந்தப் பேரணியில் பயணித்த ஜீப் வண்டியில் இருந்து துப்பாக்கிகள் இரண்டு மற்றும் கருவாக் கம்புகள் 98 என்பன நேற்றைய தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

மீட்கப்பட்ட துப்பாக்கிகளுக்கு அனுதிப் பத்திரத்தை காட்டுவதற்கு முடியாமல் போனதனை அடுத்தே, இவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். பின்னர், கண்டி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது துப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரங்களை சமர்ப்பித்துள்ளார். இதன் பின்னர் இவர் கண்டி நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment