பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் டீசரை அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் இன்று வெளியிட்டார்.
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பின்னணி வேலைகள் அனைத்தும் அதிரடியாக நடைபெற்று வந்தது.
இப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி வெளியாகும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜனி ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். அண்மையில் இப்படத்தின் டீசர் மார்ச் மாதம் முதலாம் திகதி வெளியாகுமென தனுஷ் அறிவித்திருந்தார்.
ஆனால், ஜத்குரு பூஜயஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘காலா’ டீசர் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக தனுஷ் தெரிவித்தார். இதனால் காலா படத்தின் டீசர் மார்ச் மாதம் 2 ஆம் திகதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று 2 ஆம் திகதி அதிகாலை காலா டீசரை தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டார்.
அந்த டீசரில் ” காலா என்டா கருப்பு.. காலன்...கரிகாலன்.... சண்டை போட்டு காக்கிறவன்...
“ கறுப்பு உழைப்போட வண்ணம்.. என் சாலைல வந்துபாரு அழுக்கு அத்தனையும் வண்ணமா தெரியும்...” ‘இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த நீங்க பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!!’ என்னும் வசனம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment