அமெரிக்காவுடன் சமாதானம் பேசுவதற்காக தென் கொரியா அரசின் தூதுக்குழு நாளை வடகொரியாவுக்கு செல்லவுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறியும் வடகொரிய அரசு தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதித்தன.
இதற்கிடையே, தென் கொரியாவின் பியாங்யங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த போட்டிகளில் பங்கேற்க வடகொரியா அரசு தனது வீரர்கள், வீராங்கனைகளை அனுப்பி வைத்தது. இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் தணியும் நிலை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், அமெரிக்காவுடன் சமாதானம் பேசுவதற்காக தென் கொரியா அரசு, 10 பேர் கொண்ட தூதுக்குழுவை வடகொரியாவுக்கு நாளை அனுப்பவுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், தென் கொரிய அதிபர் மூன் ஜே உயர் அதிகாரிகள் அடங்கிய 10 பேர் கொண்ட தூதுக்குழுவை வடகொரியாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார். இந்த தூதுக்குழு நாளை அங்கு சென்றடைகிறது. அப்போது அவர்கள் அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தனர்.
No comments:
Post a Comment