சட்டம் ஒழுங்கு அமைச்சு பதவி தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமருமே தீர்மானிக்க வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 4, 2018

சட்டம் ஒழுங்கு அமைச்சு பதவி தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமருமே தீர்மானிக்க வேண்டும்

சட்டம் ஒழுங்கு அமைச்சினை பொறுப்பேற்பதற்கு பொருத்தமானவர்கள் இனங்காணப்படாமையினாலேயே அதனை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ளார். அதனை அடுத்து யாருக்கு வழங்க வேண்டும் என்று இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். 

சட்டம் ஒழுங்கு அமைச்சு பதவி தொடர்பில் நிலவுகின்ற கருத்தாடல்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

அமைச்சரவை அமைச்சுக்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு வகையான கருத்துக்களை முன்வைத்துக்கொண்டிருக்கின்றனர். அவற்றின்படி சட்டம் ஒழுங்கு அமைச்சு பதவி தொடர்பாக பரவலான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுகொண்டிருக்கின்றன. 

அவ்வமைச்சை முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேக்காவுக்கு வழங்கலாம் என்றவகையிலான கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால் இது தொடர்பில் இது வரையில் எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. அதேவேளை சரத் பொன்சேக்காவுக்கு வழங்குதல் தொடர்பான எந்தவித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை. 

சட்டம் ஒழுங்கு அமைச்சினை பொறுப்பேற்கக்கூடிய அதற்கு பொருத்தமானவர்கள் இனங்காணப்படும் பட்டசத்தில் அவர்களுக்கு எதிர்காலத்தில் அப்பதவி வழங்கப்படலாம். அது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரே தீர்மானிக்க வேண்டும். அதனை ஐக்கிய தேசிய கட்சியோ அல்லது சுதந்திர கட்சியோ தனித்து தீர்மானிக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment