சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்கும் 1929 எனும் அவசர தொலைபேசி சேவையை தொழில்நுட்ப ரீதியாக மேலும் பலப்படுத்துவதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கை சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாட்டு சேவையை தொழில்நுட்ப ரீதியாக மேலும் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதற்கு இணைவாக கணினி மயப்படுத்தப்பட்ட சேவைகளும் உள்ளடக்கப்படவுள்ளன. இதுவிடயத்தில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு உள்ளுர் மற்றும் சர்வதேச ரீதியில் பயிற்சிகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்திற்கு சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சிவில் நிறுவனங்களின் உதவிகளும் பெற்றுக் கொள்ளப்படும்.
உடல் ரீதியாக, மன ரீதியாக, பாலியல் ரீதியாக மற்றும் புறக்கணிப்பு ரீதியாக சிறுவர்களை இம்சைப்படுத்தும் அனைத்து முறைப்பாடுகளையும் 1929 எனும் அவசர தொலைபேசி இலக்கத்தின் வாயிலாக முறைப்பாடு செய்ய முடியும் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment