பலாக்காயை வெட்டுவதற்காக கத்தியை கொடுக்காமையால் அடுத்த வீட்டில் வசித்து வந்த தனது பெரிய தந்தையை கத்தியால் வெட்டிக்கொன்ற சம்பவமொன்று மாவனல்ல வெலிகல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் நேற்று முன்தினம் போயா தினத்தில் இடம்பெற்றதாகவும் 58 வயதான நெவில் செனவிரத்ன என்பவரே கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தனது தோட்டத்தில் பறித்த பலாக்காயை வெட்டுவதற்காக கொலையுண்டவரிடமும் அவருடைய மகனிடமும் சந்தேக நபர் கத்தியை கேட்டுள்ளார். அதனை வழங்க மறுத்தமையால் இருதப்புக்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கொலையில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment