போதைக்கு அடி­மையானதால்கொள்ளையிர் ஈடுபட்ட நபர்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, March 2, 2018

போதைக்கு அடி­மையானதால்கொள்ளையிர் ஈடுபட்ட நபர்கள்

பெண்­களின் தங்கச் சங்­கி­லி­களை அப­க­ரித்து செல்லும் கொள்ளைக் கோஷ்­டி­யொன்றை எஹ­லிய கொடை பொலிஸார் நேற்று கைது செய்துள்­ளனர்.

பெண் ஒரு­வரின் கழுத்­தி­லி­ருந்த தங்கச் சங்­கி­லியை மோட்டார் காரில் வந்த கோஷ்­டி­யொன்று கொள்ளையிட்டுச் செல்­வ­தாக தகவல் வழங்­கி­ய­தை­ய­டுத்து பொலிஸார் அவர்­களை பின்தொடர்ந்து துரத்திச் சென்று வழி­ம­றித்து மூவர் கைது செய்யப்பட்­டுள்­ளனர்.

இவர்­க­ளி­ட­மி­ருந்த 3 பெறு­ம­தி­மிக்க தங்கச் சங்­கி­லிகள், மோதிரங்கள் உட்­பட நகை அடகு வைக்­கப்­பட்ட பற்றுச்சீட்டுக்களும் 6 கிராம் ஹெரோயின் ஆகி­ய­னவும் மீட்கப்பட்டுள்­ளன.

சந்­தேக நபர்கள் காலி, ஹொரண ஆகிய பிர­தே­சங்­களை சேர்ந்த 25–-30 வய­துடையவர்கள் எனவும் போதைக்கு அடி­மையானதால் தமக்­கு­ரிய பாரிய செல­வு­களை சமா­ளிக்க பெண்­களின் நகை­களை மிகவும் சூட்­சு­ம­மாக இவர்கள் கொள்­ளை­யடித்து வந்துள்ளமையும் ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment