கென்யா நாட்டின் வடகிழக்கில் உள்ள மன்டேரா பகுதியில் இன்று அல் ஷபாப் குழுவினர் நடத்திய தாக்குதலில் போலீஸ் உயரதிகாரிகள் 5 பேர் உயிரிழந்தனர்.
சோமாலியா நாட்டில் மேற்கத்திய கலாசாரத்தை தழுவி நடைபெற்றுவரும் ஆட்சியை ஒழித்துவிட்டு இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை நிறுவும் நோக்கத்தில் அங்குள்ள அல் ஷபாப் குழுவினர் ஆயுத மேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, சோமாலியா நாட்டின் எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள பல்வேறு நகரங்களில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்களை கென்யா மற்றும் சோமாலியா அரசுகள் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளன. இந்த குழுவினர் இருநாடுகளிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு எதிரான கென்யா அரசின் நடவடிக்கையில் ஆப்பிரிக்க யூனியன் அமைப்பை சேர்ந்த அமைதிப்படையினரும் களமிறங்கி உள்ளனர்.
இந்நிலையில், நாட்டின் வடகிழக்கில் உள்ள மன்டேரா மாகாணத்துக்கு அருகாமையில் உள்ள லாஃபே பகுதியில் இன்று அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் உயரதிகாரிகள் 5 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment