தலை இல்லாமல் 18 மாதம் உயிருடன் இருந்த அதிசய கோழி - News View

About Us

About Us

Breaking

Saturday, March 31, 2018

தலை இல்லாமல் 18 மாதம் உயிருடன் இருந்த அதிசய கோழி

அமெரிக்காவில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோழி ஒன்று 18 மாதம் உயிருடன் இருந்த சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாடு கொலராடோ. 

இந்நாட்டில் கெட் லெஸ் சிக்கன் என்ற விழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜீன் மாத தொடக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டில் உள்ள ப்ரூடா நகரில் இந்த விழாவை கொண்டாடுகின்றனர். இந்த விழாவிற்கு முக்கிய காரணம் மைக் என்ற கோழியாகும். 

அதிசய மைக் எனப் பெயரிடப்பட்ட இந்த கோழி தலை துண்டிக்கப்பட்ட பிறகும் சுமார் 18 மாதங்கள் உயிருடன் இருந்துள்ளது. ஒருநாள் மைக்கின் உரிமையாளர் சமைப்பதற்காக அதன் தலையை துண்டித்துள்ளார். ஆனால் மைக் தலை துண்டிக்கப்பட்ட பிறகும் உயிருடன் இருந்துள்ளது. இதனை கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
கோழியின் மூளையின் முக்கிய பகுதி பாதிக்கப்படாமல் இருந்ததால் கோழி உயிருடன் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும், கோழிக்கு உணவானது சிறிய குழாய் மூலம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. உணவுக்குழாயில் உணவு சிக்காமல் இருக்க நீரானது சிரஞ் மூலம் அளிக்கப்பட்டது. இதன்மூலம் 18 மாதங்கள் மைக் உயிரோடு இருந்தது.

இந்த செய்தி பல பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. ஆனால் 18 மாதங்களுக்கு பிறகு உணவுக்குழலில் உணவு சிக்கி மைக் உயிரிழந்தது. மைக்கை நினைவுகூறும் வகையில் கெட் லெஸ் சிக்கன் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment