நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பினர் நடாத்திய தாக்குதலில் 11 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Friday, March 2, 2018

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பினர் நடாத்திய தாக்குதலில் 11 பேர் பலி

நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் போகோஹரம் குழுவினர் நடத்திய தாக்குதலில் மூன்று மீட்புப்படை வீரர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

நைஜீரியாவில் ஒரு மதத்தின் அடிப்படையிலான அரசாங்கத்தை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்துடன் போகோஹரம் அமைப்பினர் 2002-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றனர். 2009-ம் ஆண்டு முதல் அவர்கள் ஆயுதப்போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

ஆட்களை கடத்துவதும், படுகொலைகள் செய்வதும் அவர்களின் அன்றாட வழக்கமாகி விட்டது. சில நகரங்களை தாக்குதல் மூலம் கைப்பற்றி அவற்றை தங்கள் கட்டுப்பாட்டிலும் வைத்துள்ளனர். அவர்களுடன் ராணுவத்தினர் சண்டையிட்டி அவர்களின் பிடியில் இருக்கும் நகரங்கள் மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள போர்னோ மாகாணத்திற்கு உட்பட்ட ரான் நகரில் உள்ள ராணுவ முகாம் மீது போகோஹரம் அமைப்பினர் நேற்று தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் மூன்று மீட்புப்படை வீரர்கள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டதாக நைஜீரியா ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்களும், நான்கு போலீஸ் அதிகாரிகளும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து 110 மாணவிகளை போகோஹரம் அமைப்பினர் கடத்திச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment