நீர்வள முகாமைத்துவத்திற்காக ஜனாதிபதி செயலணி - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 28, 2018

நீர்வள முகாமைத்துவத்திற்காக ஜனாதிபதி செயலணி

சிறப்பான நீர்வள முகாமைத்துவத்தை உறுதி செய்யும் நோக்கிலான கூட்டு முகாமைத்துவ பொறிமுறை உருவாக்கப்படவுள்ளது. இதற்கான விதந்துரைகளை மூன்று மாத காலத்தினுள் முன்மொழிவதற்கு ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்படும். ஜனாதிபதியின் செயலாளர் அதன் தலைவராக கடமையாற்றுவார்.

சுவாத்திய மாற்றங்களின் விளைவுகளால் எழக்கூடிய வெள்ளம், மண் சரிவு, வறட்சி போன்ற இயற்கை அனர்த்தங்களால் இலங்கையின் விவசாயத்துறைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் அதிகமாகும். இத்தகைய இயற்கை அனர்த்தங்கள் உணவு பாதுகாப்பிற்கும், குடிநீர் விநியோகத்திற்கும், மின்வலு உற்பத்திக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இத்தகைய சவால்களை எதிர்கொண்டு நீர் விநியோத்தை அபிவிருத்தி செய்வதற்கு பரந்த அடிப்படையிலான கூட்டுக் கொள்கை சட்டகத்தை உருவாக்கும் நோக்கில் ஜனாதிபதி செயலணி நியமிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment