கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை - News View

About Us

About Us

Breaking

Friday, February 2, 2018

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கடும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் படித்த அணுசக்தி இயற்பியலாளரான டயஸ் பலார்ட், கியூப மாநில கவுன்சிலின் அறிவியல் ஆலோசகராகவும், கியூபா அறிவியல் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 68 வயதான டயஸ் பலார்ட், கடந்த பல மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பின்னர் தொடர்ந்தும் வீட்டிலிருந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கியூபாவை ஐந்து தசாப்த காலமாக ஆட்சி செய்துவந்த பிடல் காஸ்ட்ரோ கடந்த 2016ஆம் ஆண்டு தனது 90ஆவது வயதில் காலமானார். அவர் மறைந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், அவரது மகன் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளமை கியூப அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

No comments:

Post a Comment