வவுனியாவில் நீர் வழங்கல் சபையினர் சம்பள அதிகரிப்புக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Friday, February 2, 2018

வவுனியாவில் நீர் வழங்கல் சபையினர் சம்பள அதிகரிப்புக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

வவுனியாவில் நீர் வழங்கல் சபையினர் சம்பள அதிகரிப்புக் கோரி இன்று காலை 10.30 மணியளவில் தேசிய நீர் வழங்கல் சபை அலுவலகத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த வவுனியா நீர் வழங்கல் சபை ஊழியர்கள் 25% சம்பள அதிகரிப்பு தமக்கு வழங்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் "சம்பள அதிகரி ப்பை 25 வீதத்தால் உயர்த்து", "மக்களுக்கு தண்ணீர் எங்களுக்குக் கண்ணீர்", "ஏமாற்றாதே ஏமாற்றாதே", "2015 இல் தரவேண்டியதை 2018 இல் ஆவது தா..", போன்ற வாசகங்களைத்தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

இதுவரைகாலமும் 30% சம்பள அதிகரிப்பு தருவதாக இருந்தது இம் முறை 25% சம்பள அதிகரிப்பினை வழங்குமாறு கோரியிருந்தோம். அந்த 25 வீதமான சம்பள அதிகரிப்பினை வழங்காமல் இந்த அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்து வருகின்றது. இந்த 25% சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி இன்று கவனயீர்ப்புப் போராட்டம் இலங்கையின் அனைத்துப்பகுதிகளிலும் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment