சீனாவில் மாரடைப்பு சிகிச்சைக்கு உதவி பெற பணத்தை வீசிய வாலிபர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 28, 2018

சீனாவில் மாரடைப்பு சிகிச்சைக்கு உதவி பெற பணத்தை வீசிய வாலிபர்

சீனாவில் ரயிலில் பயணம் செய்ய வந்தவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் பொதுமக்களின் உதவி பெற பணத்தை வீசிய சம்பவம் நடந்துள்ளது. சீனாவில் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயிலில் பயணம் செய்ய ரயில் நிலையம் வந்தார். பல மாதங்களுக்கு முன்பு இதயத்தில் ஆபரேசன் செய்து இருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் நெஞ்சு வலியால் துடித்த அவரால் பேக்கில் இருந்து அதற்குரிய மாத்திரையை வெளியே எடுக்க முடியவில்லை.

அதே நேரத்தில் உதவிக்கு யாரையும் அழைக்க முடியாத நிலையில் அவர் இருந்தார். இதற்கிடையே ரயில் நிலையத்தில் வந்து செல்லும் மக்கள் மிகவும் பரபரப்பாக இருந்தனர்.

யாரும் அவரை கண்டு கொள்ளாமல் சென்று கொண்டிருந்தனர். எனவே தான் சிகிச்சை பெற பொதுமக்கள் கவனத்தை தன்பக்கம் திருப்ப அவர் தான் வைத்திருந்த பணத்தை கட்டுக்கட்டாக வீசினார்.

பணத்தை பார்த்ததும் பரபரப்பான மக்கள் நெஞ்சு வலியால் துடித்து கொண்டிருந்த வாலிபரை நோக்கி தங்கள் கவனத்தை செலுத்தினர். பின்னர் அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment