அரச வங்கிகளின் தலைவர்கள் - ஜனாதிபதி சந்திப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 28, 2018

அரச வங்கிகளின் தலைவர்கள் - ஜனாதிபதி சந்திப்பு

தேசிய பொருளாதார சபையினூடாக பொருளாதார புத்தெழுச்சியை நோக்கி ஒன்றிணைந்த 100 கடன் முன்மொழிவு முறைமைகளை உள்ளடக்கிய நிகழ்ச்சித்திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் அரச வங்கிகளின் தலைவர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (28) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அமைச்சர்களான மங்கள சமரவீர, லக்ஷ்மன் கிரியெல்ல, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவா விதாரண, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, தேசிய பொருளாதார சபையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் லலித் சமரகோன் ஆகியோரும் அரச வங்கிகளின் தலைவர்கள், பணிப்பாளர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment