மிதமாக மது அருந்துபவர்கள் நீண்ட காலம் வாழலாம் - ஆய்வில் புது தகவல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 28, 2018

மிதமாக மது அருந்துபவர்கள் நீண்ட காலம் வாழலாம் - ஆய்வில் புது தகவல்

அமெரிக்காவில் 90 வயதை கடந்தவர்களிடம் நடத்திய ஆய்வில் அளவில் குறைவாக மது அருந்துவதும் நீண்ட ஆயுளுக்கான காரணங்களில் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வு குழுவினர் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து 90 வயதை கடந்தும் வாழ்ந்துவரும் 1700 பேரின் பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை மிகவும் நெருக்கமாகவும், துல்லியமாகவும் கண்காணித்து ஆய்வு செய்து வந்தனர்.
இவர்களில் நாளொன்றுக்கு 2 கிளாஸ்களுக்கு மிகாமல் ஒயின் அல்லது ஆல்கஹால் அடங்கிய இதர மது வகைகளை மிதமாக குடித்து வந்தவர்களின் மரண விகிதம் சுமார் 18 சதவீதம் அளவுக்கு குறைத்துள்ளதாக இந்த ஆய்வு குழுவின் தலைவரும் நரம்பியல் நிபுணருமான கிளாடியா காவாஸ் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க மருத்துவ அறிவியல் துறை மேம்பாடு தொடர்பாக சமீபத்தில் நடந்த ஆண்டாந்திர கூட்டத்தில் 90 + Study என்னும் இந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment