பிரபல போதைபொருள் வர்த்தகர் வெலே சுதா என்ற நொஹான் விதான பத்திரனகே சமந்த குமாரவை விடுதலை செய்வதாக கொழும்பு, மேல்நீதிமன்ற நீதிபதி விக்ரம் களுஆராய்ச்சி, இன்று உத்தரவிட்டுள்ளார்.
2004 ஆம் ஆண்டு 6.7 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால், அவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஹெரோயின் சம்பந்தப்பட்ட மற்றுமொரு வழக்கில் வெலே சுதாவுக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment