சமாதானம், நல்லிணக்கம் என்பனவற்றிற்கு எதிரான சவால்களை வெற்றிகொள்ள அனைவரும் ஒன்றிணையவேண்டும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 28, 2018

சமாதானம், நல்லிணக்கம் என்பனவற்றிற்கு எதிரான சவால்களை வெற்றிகொள்ள அனைவரும் ஒன்றிணையவேண்டும்

சமாதானம், நல்லிணக்கம் என்பனவற்றிற்கு எதிரான சவால்களை வெற்றிக் கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம் என்பது ஆன்மீக கோட்பாடாகும். இதனால், ஆன்மீக ஆரோக்கியம் இல்லாத சமூகத்தில் நல்லிணக்கத்தை வெற்றி பெறச் செய்வது சவாலானதாகும். சகல துறைகளிலும் இதற்கு வலுவூட்டுவது அனைவரதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். கொழும்பு ரீகல் திரையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய சமாதான செயலகம் தயாரித்த மூவர் என்ற திரைப்படமும் நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய ஆயுதமோதலின் காரணமாக நீண்டாகலமாக நிலவிய சமாதானம் மற்றும் அரசியலுக்கும் இலங்கையில் அனைத்து பிரஜைகளின் வாழ்க்கைக்கும் கௌரவத்திற்கும் பாதுகாப்பிற்கும் ஏற்பட்ட அழுத்தம் மற்றும் பாதிப்பு மற்றும் அழிவை கவனத்தில் கொண்டு அரசாங்கம் முழுமையாக முயற்சிகளை மேற்கொண்டது. கடந்த காலசம்பவங்கள் மீண்டும் ஏற்படாததை உறுதி செய்வதற்கும் நல்லிணக்கத்திற்குமான வகையில் தேசிய கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
எதிர்கால ஆரம்பம் மூலம் பல கட்சி செயற்பாடுகளுக்கு அழைப்பு விடுத்து ஜனநாயகம் நல்லாட்சி மொழி மற்றும் கலாச்சாரத்திற்குள்ள உரிமைகள் உள்ளிட்ட மனித உரிமைகள் சட்டவாட்சி தேசத்தின் ஐக்கியம் மற்றும் பல்லினத்தை ஏற்றுக்கொள்ளும் சமூக நல்வாழ்வு என்று விடயத்தின் அடிப்படையில் இந்த நல்லிணக்கம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான தேசிய கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்ககது.

தேசிய ஐக்கியம் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்எஸ் ஜயசிங்கவினால் இந்த கொள்கை பிரகடனம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்திற்கான தலைவியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் அரச அதிகாரிகள், புத்திஜீவிகள் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment