களஞ்சிய சாலைகளை நிர்மாணித்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 28, 2018

களஞ்சிய சாலைகளை நிர்மாணித்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல்

வறட்சி வலயங்களில் விவசாயிகளின் அறுவடைகளை களஞ்சியப்படுத்வதற்காக களஞ்சியசாலை வசதிகளை செய்துகொடுக்கும் நோக்கில் அநுராதபுரம், மொனறாகலை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள களஞ்சிய கட்டடத்தொகுதிகள் அந்த மாவட்ட செயலாளர்களின் கண்காணிப்பின்கீழ் தற்போது செயற்பட்டு வருகின்றன.

தற்பொழுது கட்டடப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்ற கிளிநொச்சி, பொலநறுவை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள களஞ்சியசாலைகளின் செயற்பாடுகளை இவ்வருடத்திற்குள் முன்னெடுக்க எதிர்பார்க்கபபடுகின்றது. 

இந்த களஞ்சிய கட்டடத்தொகுதியில் நடவடிக்கை மேற்கொள்வதற்காக பிரதேச அபிவிருத்தி வங்கியுடன் முகாமைத்துவத்திற்காக ஒப்பந்த உடன்படிக்கையை மேற்கொள்வதற்கான அதிகாரம் மாவட்ட செயலாளருக்கு வழங்கப்படவுள்ளன. 

இந்த பணிகளை ஒழுங்குறுத்துதல் மற்றும் கண்காணிப்பதற்கு இதன் மாவட்டங்களில் உள்ள செயலாளர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

No comments:

Post a Comment