மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி - News View

About Us

About Us

Breaking

Friday, February 2, 2018

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் பல வருடகாலம் மிக இரகசியமாக நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று நேற்று கல்கிஸ்‍ஸை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது முற்றுகையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்த சுற்றிவளைப்பின் போது இராஜகிரிய மற்றும் களுத்துறை வாத்துவ பிரதேசங்களை சேர்ந்த 24 மற்றும் 35 வயதுடைய இரண்டு பெண்களே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் பல வருடங்களாக இரகசியமாக இந்த விபச்சார விடுதி செயற்பட்டு வந்துள்ளது. இதனை முற்றுகையிட கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவின் பேரிலேயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த சுற்றிவளைப்பின் போது 24 மற்றும் 35 வயதுடைய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களே இந்த விபச்சார விடுதியின் முகாமையாளர் மற்றும் செயலாளராக செயற்பட்டவர்கள் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது. 

கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவின் பேரில் கல்கிஸ்‍ஸை குற்றத்தடுப்பு பிரிவு உபநிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் சன்ஜீவ சில்வாவின் வழிக்காட்டலில் பொலிஸ் கான்சிடபிள்களான, அரவிந்த, சாமிக்க, நிரோஷன் மற்றும் பெண் கான்ஸ்டபிள்களான கிருஸ்னவானி, சரோஜினி, குமாரி மற்றும் சார்ஜன் தம்மிக்கவினால் நேற்று மாலை 3.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இவர்களை கைது செய்ய பிரதேசவாசிகளின் உதவிகளும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் கைது நடவடிக்கை நடக்கும சந்தர்ப்பத்தில் நிலையத்தில் பணியாற்றிவந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment