இலங்கையின் மிகப்பாரிய உணவு பொதியிடல் மற்றும் விவசாய கண்காட்சி - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 28, 2018

இலங்கையின் மிகப்பாரிய உணவு பொதியிடல் மற்றும் விவசாய கண்காட்சி

இலங்கையின் மிகப்பாரிய பொதியிடல் மற்றும் விவாசாய கண்காட்சியான Pro Food / Pro Pack and Ag-Biz தொடர்ந்து 17 ஆவது ஆண்டாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை பண்டாராநாயக்க ஞாபகார்த்த சர்வதேச கண்காட்சி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 

இலங்கை உணவு பதனீட்டாளர்கள் சங்கம் மற்றும் Lanka Exhibition and Conference Service நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து இந்த கண்காட்சியினை ஒழுங்கு செய்துள்ளன. உணவுப்பானவகை மற்றும் விவசாயத்துறை தொடர்பில் நாட்டில் இடம்பெறும் மிகப்பாரிய நிகழ்வாக கருதப்படுகின்ற இக்கண்காட்சியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்காக 350 க்கு மேற்பட்ட கண்காட்சி கூடங்கள் அமைக்கப்படவுள்ளன.

இக்கண்காட்சி மற்றும் நுகர்வோர் சந்தை நிகழ்வானது மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளதுடன் 30,000 இற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகைதருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தொழிற்துறையில் மிக பாரிய சர்வதேச தொழிற்பாட்டாளர்களாக விளங்கும் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கென இந்த வருட கண்காட்சி இரு வெவ்வேறான கண்காட்சி கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிந்து 80 இற்கு மேற்பட்ட நிறுவனங்கள் இந்த ஆண்டு நிகழ்வில் பங்குபற்றவுள்ளன.

சிறிய மற்றும் நடுத்தரஅளவிலான தொழிற்துறை மற்றும் நுண்உற்பத்தி பிரிவிற்கான கூடாரத்திற்கு கைத்தொழில் அமைச்சு அனுசரணை வழங்குகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment