வட மாகாணத்தில் முன்பள்ளி ஆசிரியர்களை மாகாண பொதுச்சேவையில் இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகின்றது.
ஏற்கனவே இந்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித்தினம் 2017 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததை தொடந்து இது நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த பரீட்சை தொடர்பான இறுதிதீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.
வட மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களை மாகாண பொதுச்சேவையில் உள்வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரி க.பொ.த. சாதாரண பரீட்சையில் தாய்மொழி மற்றும் கணிதம் உட்பட ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டுமென்பதுடன், அவற்றில் ஏதாவது மூன்று பாடங்களில் திறமைச்சித்தி பெற்றிருந்தல் வேண்டும்.
பல்கலைக்கழகம் / பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றிலிருந்து அல்லது உயர்கல்வி அமைச்சு / மூன்றாம் நிலை தொழில்கல்வி அமைச்சு ஆகியவற்றினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது நிறுவனம் ஒன்றிலிருந்து அல்லது சிறுவர் செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஏதாவதொரு நிறுவனம் ஒன்றிலிருந்து முன்பள்ளிக்கல்வி தொடர்பான ஒரு வருடத்திற்கு குறையாக டிப்ளோமா சான்றிதழினை பெற்றிருந்தல் வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்காக வயது எல்லை 18 தொடக்கம் 40 வயதிற்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்க முடியும். இதுதொடர்பான தகவல்களை வடமாகாண இணையத்தளத்தில் (www.np.gov.lk ) பார்வையிடமுடியும். மேலதிக தகவல்களை 021 221 9939 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment