முதன்முறையாக பெண்களுக்கு வெல்கம் சொன்ன சவூதி அரேபியா ராணுவம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 28, 2018

முதன்முறையாக பெண்களுக்கு வெல்கம் சொன்ன சவூதி அரேபியா ராணுவம்

சவூதி அரேபியாவில் பெண்களுக்கு படிப்படியாக பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ராணுவத்தில் முதன்முறையாக பெண் பணியாளர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. 

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் சல்மான் தலைமை பொறுப்புக்கு வந்த பின்னர், அரசு கடைப்பிடித்து வந்த பல பழமைவாத நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுத்தினார். பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை மைதானத்தில் சென்று காணும் உரிமைகள் அமல்படுத்தப்பட்டன.

மேலும் அரசின் முக்கிய பதவிகளில் பெண்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், முதன்முறையாக ராணுவத்தில் பெண்கள் இணைவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராணுவத்தில் 12 பணியிடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வரும் வியாழன் வரை இதற்காக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியாத், மெக்கா, அல் காசிம் மற்றும் மெதீனா மாகாணங்களில் வசிக்கும் 25 முதல் 35 வயதுக்குள்ளான பெண்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்சம் டிப்ளமோ படிப்பும், கணவர் அல்லது சகோதரர்கள் மேற்கண்ட மாகாணத்தில் பணி புரிய வேண்டும் போன்ற தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மிக முக்கிய ராணுவ ஆபரேஷன்களில் பெண்கள் ஈடுபடுத்தப்பட வாய்ப்புகள் இல்லை, பாதுகாப்பு பணி மற்றும் அலுவல் பணிகள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment