தேர்தலில் வாக்களிக்கும் போது ஒரு புள்ளடியை மாத்திரம் இடுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
வாக்களிப்பின் போது ஒரேயொரு புள்ளடி மாத்திரமே பயன்படுத்த வேண்டும் .ஊனமுற்ற விசேட தேவைகளை கொண்ட அனைவருக்கும் பொதுவாக ஆரோக்கியமுள்ளவர்களுக்குள்ள வாக்களிக்கும் உரிமை உண்டு. விசேட தேவைகளை கொண்டவர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக தேவையான வசதிகள் செய்யப்படும்.
வாக்களிக்ககூடிய அளவுக்கு சிரமங்களை கொண்டுள்ள விசேட தேவைகளை கொண்டுள்ளவர்கள், ஊனமுற்றவர்களினால் தம்மால் வாக்களிப்பதற்கு உதவியாக அழைத்து வரவேண்டியமைக்கான வைத்திய அறிக்கையும் அதனை கிராம அதிகாரியினால் உறுதி செய்த பின்னர் சம்பந்தப்பட்டவரினால் எமது பணியாளர் ஊழியர் முன்னிலையில் வாக்களிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment