இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் மற்றும் சினமன் ஹோட்டலினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச சினமன் ஸ்ரீலங்கன் புகைப்படப்போட்டி 2017 (Cinnamon Sri lanka Photo Contest 2017) போட்டியில் Sri Lanka Tourism Activity and Adventure photography விருதை ஊடகப் புகைப்படப்பிடிப்பாளரான ஜமுனி றஸ்மிகா பெரேரா பெற்றுள்ளார்.
விருது வழங்கும் வைபவம் சினமன் ஹோட்டலில் கொழும்பு சுற்றுலா அபிவிருத்தி கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையில் நேற்று நடைபெற்றது.
சுற்றுலாத்துறையினரை ஈர்க்கக்கூடிய மேம்பாட்டு சமூக கலாச்சாரம் மற்றும் சுற்றாடலை உணர்த்தும் புகைப்படத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதுடன் தேசிய மற்றும் வெளிநாட்டு புகைப்படத்துறையில் வல்லுணரைக் கொண்ட நடுவர் குழு விருதிற்கான புகைப்படத்தை தெரிவுசெய்திருந்தது.
விருதினை பெற்ற ஜமுனி றஸ்மிகா அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக புகைப்படப்பிடிப்பாளராக கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment