ஆயுத மோதல் நிலவிய காலப்பகுதியில் இலங்கையினால் கொத்தணி (cluster) குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக சில தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இருப்பினும் இலங்கை பாதுகாப்பு பிரிவினரால் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும், அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கோட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை எப்பொழுதும் இவ்வாறான குண்டுகளை பயன்படுத்தவில்லை மற்றும் எதிர்காலத்திலும் பயன்படுத்தபோவதுமில்லை என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொத்தணிக்குண்டு தொடர்பான சர்வதேச ஒஸ்லோ இணக்கப்பாட்டுக்கு உடன்பாடு தெரிவிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பது தொடர்பில் அமைச்சர் குறிப்பிடுகையிலேயே இந்த விடத்தை குறிப்பிட்டார்.
நிலையான சமாதானம் மற்றும் நிலைப்பாடு தொடர்பில் இலங்கையில் காணப்படுகின்ற அர்ப்பணிப்பினை வெளிக்காட்டும் வகையில், இதுவரை 102 நாடுகள் இந்த இணக்கப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளன.
செய்தியாளர் : இதில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கைக்கு எதிராக குற்றஞ்சாட்டியுள்ள சில தரப்பினர் என்று யாரை குறிப்பிடுகின்றீர்கள்.
அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன : சர்வதேச ரீதியிலேயே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
செய்தியாளர் : இந்த இணக்கப்பாட்டின் மூலம் சர்வதேச நீதிமன்றங்களுக்கு இது வழிவகுக்கும் அல்லவா
அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன : யுத்தத்துடன் தொடர்புபட்ட சர்வதேச நீதிமன்றம் தொடர்பில் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் மகிந்த ராஜபக்ஷவே அதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார். ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருந்த அறிக்கைக்கும் அவர் உடன்பாடு தெரிவித்திருந்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வந்ததன் பிற்பாடு இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது. சமகால அரசாங்கத்தினால் இதுதொடர்பில் எந்த வித உடன்பாட்டிற்கும் வரவில்லை. 2015ஆம் ஆண்டு சமகால அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரே வெளிநாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உடன்பாடு காணப்பட்டது என்று ஊடகவியலாளர் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளிநாட்டிற்கு சென்று 13+ அதாவது சமஷ்டி தருவதாக கூறினார். நாட்டிற்கு வந்தபின்னர் அவ்வாறு கூறவில்லை என்று தெரிவித்தார். இவ்வாறான நிலைப்பாட்டை நாம் எப்போதும் கடைப்பிடித்ததில்லை. நாம் சொல்வதையே செய்வோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment