ஈராக்கின் வடக்கு பகுதியில் துருக்கி இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் குர்து படையைச் சேர்ந்த 49 வீரர்கள் பலியாகியுள்ளனர். இதுகுறித்து துருக்கி இராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,
''இராக்கின் வடக்குப் பகுதியில் சாப் அவசின் மற்றும் ஹக்குர்க் மாகாணத்தில் இரண்டு வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் குர்து படையைச் சேர்ந்த 41 வீரர்கள் கொல்லப்பட்டனர்'' என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக குர்து படையினர் 1980 முதல் துருக்கியுடன் சண்டையிட்டு வருகின்றனர். துருக்கியில் அவ்வப்போது குண்டுவெடிப்பு சம்பவங்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் குர்து படையினருக்கு எதிராக துருக்கி தொடர்ந்து வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. குர்து படையை துருக்கி தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. குர்து மற்றும் துருக்கி இடையே நடக்கும் சண்டையில் இதுவரை 40,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment