ஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு வர விமானத்திற்கு ரூ.70 லட்சத்து 65 ஆயிரம் வாடகை - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 28, 2018

ஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு வர விமானத்திற்கு ரூ.70 லட்சத்து 65 ஆயிரம் வாடகை

நடிகை ஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு வர துபாய் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தனி விமானத்திற்கு ரூ.70 லட்சத்து 65 ஆயிரம் வாடகை செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை ஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு வர தொழில் அதிபர் அனில் அம்பானி தனி விமானத்தை கடந்த 25-ந் தேதி துபாய்க்கு அனுப்பி வைத்தார். இந்த தனி விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்தது. இதையடுத்து ஸ்ரீதேவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, துபாய் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த தனி விமானம் மூலம் மும்பை கொண்டுவரப்பட்டது.

நேற்று மாலை வரை 3 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தனி விமானத்திற்கு ரூ.70 லட்சத்து 65 ஆயிரம் வாடகை செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment