எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு அன்றையதினம் காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணியுடன் நிறைவடையும். வாக்களிப்பு நிலையத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் பின்னர் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள் என்று அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் திலின விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.
வட்டாரத்தில் கொத்தணிமுறையில் எண்ணப்படும் வாக்குகளுடன் தபால் மூல வாக்குகளும் சேர்த்து எண்ணப்படும். 200க்கு குறைந்த தபால் மூல வாக்குகள் இருக்குமாயின் அவற்றை வாக்குகளை எண்ணும் பணியாளர்களே எண்ணுவார்கள்.
200க்கு மேலதிகமான வாக்குகள் இருக்குமாயின் அதற்கென விசேடமாக வாக்கெண்ணும் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு பொதுக்கணக்கில் சேர்க்கப்படும். அன்று மாலை 6.00 மணியளவில் வட்டார முறையில் வெற்றிபெற்ற அல்லது கட்சிகளின் அல்லது சுயேட்சைக்குழுக்களின் பெயர் அறிவிக்கப்படும்.
பின்னர் விகிதாசார முறையில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் மூலம் ஆசனங்களை பெற்ற கட்சிகள் அல்லது சுயேட்சை குழுக்களின் பெயர் விபரம் எண்ணிக்கையோடு அறிவிக்கப்படும் என்றும் திலின விக்கிரமரட்ண மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment