நாட்டின் 70 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுக்கு அமைவாக சதோச நிறுவனம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது என்று சதோச நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி எஸ்.எச்.எம்.பராஸ் தெரிவித்துள்ளார்.
சதோச ஊடாக சுதந்திரத்தைக் கொண்டாடுவோம் என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் அமுற்படுத்தப்பட இருக்கின்றது. மக்கள் இதன் மூலம் பாரிய அளவில் நன்மையடைவார்கள் என்று கூறினார்.
ஒரு கிலோ பாஸ்மதி அரிசி 120 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதோடு, ஒரு கிலோ அரிசி 60 ரூபாவிற்கு விற்பனையாகிறது. 500 கிராம் பெரிய வெங்காயம் 55 ரூபாவாகும். 500 கிராம் செத்தல் மிளகாய் 110 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. 500 கிராம் பருப்பு 54 ரூபா 50 சதத்திற்கு விற்பனையாவதாக சதோச நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment