முற்கூட்டியே அரசிடம் இந்தக்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தபோதிலும் அலட்சியமாக இருந்தது அரசு. இன்று இந்த பணிப்பகிஷ்கரிப்பு நடக்கும்வரை இவர்களுக்கு கடிதம் தயாரிக்க நேரமிருக்கவில்லையா? கையொப்பமிட நேரமிருக்கவில்லையா? இந்த பணிப்பகிஷ்கரிப்பை தவிர்க்க குறைந்தபட்சம் நேற்றாவது கடிதத்தை தயாரித்திருக்கலாம்! குந்தியிருந்துவிட்டு இன்றைக்கு 1230க்கு கடிதம் வருகிறது.
ஏன்?
இதனால் பாதிக்கப்படுவது மக்கள் என்பதால் ஒரு அசட்டை. வைத்தியர்களால் மக்கள் பாதிக்கப்படும்போது மக்களும் வைத்தியர்களும் சண்டையிட்டு எதிராளியாவார்கள். நாளை மருத்துவர்கள் சங்கம் அரசின் குட்டுக்களை மக்களுக்கு சொல்லும்போது அவர்களும் நம்பமாட்டார்கள் என்ற எதிர்பார்ப்பு! இதற்குப்பின்னால் வேறொன்றுமில்லை!
சில்லறைத்தனமான அரசியல் தவிர!
ஊழல் அரசாங்கம் என்று நாம் கத்திக்கத்தி கிடந்தபோதெல்லாம் மக்கள் நம்மை அரசுக்கு எதிராக சூழ்ச்சி செய்வதாக ஏசினார்கள்! மந்திரிகள் நாங்கள் ஆட்சியைக்கவிழ்க்க சதி செய்வதாக ஏசினார்கள். ஆனால் இப்போது எங்கே கொண்டுபோய் வைக்கப்போகிறீர்கள் உங்கள் மொகறைகளை? எங்களை சேறுவாரித்தூற்றினீர்களே? நாங்கள் என்ன பொய்யா சொன்னோம்?
போராடாமல் பெறமுடிந்தால் நாங்களேன் போராடுகிறோம்?
Dr. ரூபராஜன்
No comments:
Post a Comment