1st Test - Day 01: வலுவான நிலையில் பங்களாதேஷ் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 31, 2018

1st Test - Day 01: வலுவான நிலையில் பங்களாதேஷ்

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் பங்களாதேஷில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய (31) முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 374 ஓட்டங்களை பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அந்த வகையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய தமீம் இக்பால் மற்றும் இம்ருல் கைஸ் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மொமினுல் ஹக் ஆட்டமிழக்காது 175 ஓட்டங்கள் பெற்றுக் கொடுத்ததோடு, விக்கெட் காப்பாளரான முஸ்பிகுர் ரஹீம் 92 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இலங்கை அணி சார்பில் சுரங்க லக்மால் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

அந்த வகையில் இன்றைய ஆட்ட நேர முடிவில்
பங்களாதேஷ் 374/4* (90.0)
மொமினுல் ஹக் 175*
முஸ்பிகுர் ரஹீம் 92
தமீம் இக்பால் 52
இம்ருல் கைஸ் 40

சுரங்க லக்மால் 2/43
லக்‌ஷான் சந்தகன் 1/58
குசல் பெரேரா 1/98

நாளை (01) போட்டியின் இரண்டாம் நாளாகும்.

1st Test: SLvBAN; துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் (மு.ப. 11.25)

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் பங்களாதேஷில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (31) பங்களாதேஷின் சிற்றகொங்கிலுள்ள ஷஹுர் அஹ்மட் சௌத்ரி விளையாட்டரங்கில் இடம்பெறுகிறது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இலங்கை அணி சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த டெஸ்ட் குழாமில், காயமடைந்த அஞ்சலோ மெத்திவ்ஸின் இடத்திற்கு குசல் மெண்டிஸ் இணைக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் அணி சார்பில், காயமடைந்த ஷகிப் அல் ஹசனுக்கு பதிலாக அறிமுக வீரராக பந்து வீச்சாளர் சுன்ஷாமுல் இஸ்லாம் களமிறக்கப்பட்டுள்ளார். ஷகிப் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியதை அடுத்து, இத்தொடருக்காக நான்கு வருடங்களின் பின்னர் அப்துர் ரஷாக் அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் முதல் போட்டியில் அவர் விளையாடவில்லை.

இலங்கை : திமுத் கருணாரத்ன, தனஞ்சய டி சில்வா, குசல் மென்டிஸ், தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல, ரொசேன் சில்வா, தில்ருவன் பெரேரா, ரங்கன ஹேரத், சுரங்க லக்மால், லக்‌ஷான் சந்தகன், லஹிரு குமார

பங்களாதேஷ்: தமீம் இக்பால், இம்ருல் கைஸ், லிட்டன் தாஸ், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹிம், மஹ்முதுல்லா, மொசாதிக் ஹொசைன், மெஹ்தி ஹசன், தஜியுல் இஸ்லாம், சுன்ஷாமுல் இஸ்லாம் (அறிமுகம்), முஸ்தாபிசுர் ரஹ்மான் 

பங்களாதேஷ் அணியின் 2 ஆவது விக்கெட் இழந்த நிலையில் மதிய போசண இடைவேளைக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதன்போது அவ்வணி 120 ஓட்டங்களை பெற்றிருந்தது.

பங்களாதேஷ்120/2 (27.4)
தமீம் இக்பால் 52
இம்ருல் கைஸ் 40
மொமினுல் ஹக் 26*

சிம்பாப்வே, பங்களாதேஷ், இலங்கை அணிகள் மோதிய முக்கோண ஒரு நாள் போட்டித் தொடரை கைப்பற்றியுள்ள இலங்கை அணி, தற்போது வலுவான அணியாக இந்த டெஸ்ட் தொடரை எதிர்கொள்ளும் என கிரிக்கெட் வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இரு அணிகளுக்கிடையில் இடம்பெறும் இத்தொடரில் இரண்டு டெஸ்ட்போட்டிகள் மற்றும் இரு ரி20 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

முதலாவது டெஸ்ட் : ஜனவரி 31 - பெப்ரவரி 04
இரண்டாவது டெஸ்ட் : பெப்ரவரி 08 - பெப்ரவரி 12

முதலாவது ரி20 : பெப்ரவரி 15
இரண்டாவது ரி20 : பெப்ரவரி 18

No comments:

Post a Comment