நுவரெலியா, பார்க் வீதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் ரூபா 1.45 கோடி பணம் மற்றும் ரூபா 37 இலட்சம் பெறுமதியான காசோலை ஒன்றும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளக்பூல் பகுதியிலுள்ள சிகரெட் விற்பனை முகவர் நிலையத்திற்கு சொந்தமான ரூபா 1 கோடி 45 இலட்சம் பணத்தை அருகிலுள்ள வங்கியில் வைப்பிலிடுவதற்காக சென்ற வேளையில், மூவரால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக, நுவரெலியா பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இன்று (02) காலை, சிறிய லொறி ஒன்றின் மூலம் குறித்த பணத்தை வங்கிலிடுவதற்காக எடுத்துச் சென்ற வேளையில், பார்க் வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் வைத்து, முச்சக்கர வண்டியில் வந்த மூவர், வீதியை மறித்து லொறியை நிறுத்தியுள்ளனர். அதன் பின்னர் லொறியின் இடதுபக்க கதவின் கண்ணாடியை இரும்புப் பொல்லால் உடைத்து சாரதி மற்றும் பணத்தை வைத்திருந்தவர்கள் மீது மிளகுத்தூள் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு, பணப்பையை கொள்ளையிட்டு தாங்கள் வந்த முச்சக்கர வண்டியிலேயே தப்பிச் சென்றுள்ளனர்.
No comments:
Post a Comment