சர்வதேச அளவில் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள போதைப் பொருளை இல்லாதொழிக்க, நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டி போதைப் பொருட்களுக்கெதிரான அரச சார்பற்ற நிறுவனங்களின் சர்வதேச சம்மேளனம் அவருக்கு விசேட விருது வழங்கி கௌரவித்துள்ளது.
சீனாவின் மெகாவோகியில் கடந்த நவம்பர் 08ஆம் திகதி இடம்பெற்ற போதைப் பொருட்களுக்கெதிரான அரச சார்பற்ற நிறுவனங்களின் சர்வதேச சம்மேளனத்தில், உலகளாவிய ரீதியில் 40 நாடுகள் மற்றும் 87 அரச சார்பற்ற நிறுவனங்கள் பங்கேற்றன. இதன்போது, குறித்த விருதை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
அந்த விருது இன்று (2) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, போதைப் பொருட்களுக்கெதிரான நிறுவனங்களின் ஒன்றிணைந்த சம்மேளனத்தின் தலைவர் வைத்தியர் சரத் எம் சமரகேவினால் இவ்விருது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இதனிடையே போதைப்பொருள் பாதிப்புக்களை இல்லாதொழிப்பதற்காக அயராத முயற்சியுடன் அர்ப்பணிப்போடு மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மேற்கொண்டு வரும் பணிகளைப் பாராட்டி நட்பு 'மிதிரு மிதுரோ சங்சந்தய' அமைப்பாளர் வண. குப்பிய வத்தே போதானந்த தேரருக்கு இந்த சர்வதேச சம்மேளத்தினால் வழங்கப்பட்ட விருதினை ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.
அமைச்சர் தலதா அதுகோரள, அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பேராசிரியர் ரவீந்தர பிரனாந்து, போதைப் பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் வைத்தியர் சமந்த கித்தலவ ஆராச்சி உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment